• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

அழகு குறிப்புகள்:

Byவிஷா

Apr 18, 2022

சருமத்திற்கு அழகு தரும் எலுமிச்சை:
எலுமிச்சை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் பலவித நன்மைகளை வழங்கும். ஆனால் இந்த எலுமிச்சை அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது அல்ல. இதன் காரணமாக பலரது மனதிலும் சரும அழகைப் பராமரிக்க எலுமிச்சையைப் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் எழும். இங்கு எலுமிச்சையை சருமத்திற்கு பயன்படுத்தினால் எந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்பதை பார்க்கலாம்.
எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். எலுமிச்சையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, சருமத்தில் பருக்களுக்கு காரணமான பாக்டீரியாக்களை அழித்து, அடிக்கடி பருக்கள் வருவதைத் தடுக்கும்.
எலுமிச்சையை சாறு எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 5 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் மட்டுமின்றி, கை, கால்களிலும் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இறந்த செல்களை நீக்க எலுமிச்சை பெரிதும் உதவியாக இருக்கும்.
முகத்தில் அதிகம் எண்ணெய் வழிந்தால், அதனைத் தடுப்பதற்கு எலுமிச்சை உதவி புரியும். அதற்கு தினமும் எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, அதனை பஞ்சில் நனைத்து, முகத்தைத் துடைத்து எடுத்தால், எண்ணெய் சுரப்பு குறையும்.
முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் கருமையான தழும்புகள் இருந்தால், அதனைப் போக்க சிறந்த பொருள் என்றால் அது எலுமிச்சை தான். அதற்கு எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தினமும் இரவில் படுக்கும் முன் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.