சனதான தர்மம் எல்லாவற்றையும் உள்ளடக்கியது பிரிட்டிஷ் வருகையால் நம்மவர்களிடம் வரி வசூலித்து அவரது கொள்கைகளை அச்சடித்து வினியோகம் செய்தனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
19 ஆம் நூற்றாண்டில் நாம் சாதிய அடிப்படையில் , சிலர் பிரிக்கப்பட்டு இருந்தோம் , பலர் கோவிலில் கூட நுழைய முடியாமல் இருந்தனர் இது சனாதன தர்மம் இல்லை , நமது கடவுள் மற்றும் சனாதன தர்ம தீயவை ஆக காட்டி ஆங்கிலேயர்கள் கட்டாய மத மாற்றம் என்னும் கொடுமையை செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு பகுதியில் அய்யா வழி மக்களின் புனித நூலான அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பேச்சு:
அய்யா வழி மக்களின் புனித நூலான அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு பகுதியில் நடைபெற்ற அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழாவில் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழா சிறப்புரையாற்றினார்.

அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுகையில்..,
இன்று ஒரு முக்கியமான நாள், அய்யா வைகுண்டர் தந்த அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழா நடைபெற்று வருகிறது. மூன்றாவது முறையாக அய்யா தொடர்பான நிகழ்வில் பங்கேற்பது நான் ஆசீர்வதிகபட்டவனாக உணர்கிறேன்.
பாரதத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்க சனாதன தர்மம்த்திற்கு ஆபத்து வந்தால் நாராயணன் அவதரிப்பார் என்பது நம்பிக்கை. அனைவரும் ஒன்று அனைவரும் சமம் என்பதை தான் சனாதன தர்மம் கூறுகிறது , மக்கள் அனைவரும் பரஸ்பர அன்போடு வாழவேண்டும்.

அனைவரும் ஒரே குடும்பம் , ஒரு கடவுளை தான் வழிபட வேண்டும் என சனாதனதர்மம் கூறவில்லை. பாரதத்தில் வேறு மொழி பேசலாம் , வேறு உடை அணியலாம் வெவ்வேறு கடவுள்களை கூட வணங்கலாம் ஆனால் நாம் அனைவரும் ஒன்று தான்.
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இந்துக்கள் மற்றும் ஹிந்து தர்மத்தை குறித்து கண்டனங்கள் தெரிவித்தனர் நம்மை தீய சத்தியாக காட்டினர்.

அனைவரின் வீடுகளிலும் மட்டுமல்ல அனைத்து பள்ளிகளிலும் அகல திருட்டு அம்மானை நூல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் இது ஒரு தமிழகத்துக்கு மட்டுமானது அல்ல இது உலகத்திற்கானது.
திருக்குறளை படிப்பது போன்று அகிலத்திரட்டு புத்தகத்தை தினசரி படிக்க வேண்டும்.

நாட்டை வழிநடத்தும் பிரதமர் நரேந்திர மோடி ஆய்யா வைகுண்டரின் பக்தனாக இருந்து வருகிறார் 140 கோடி மக்களின் நலனுக்காக ஒரு பிரதமர் மோடி உள்ளார், உழைக்கிறார் என்றால் அது நமது பிரதமர் மோடி தான்.
