• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

டிரென்டிங்கில் முதலிடம் பெற்ற அஜித்தின் ‘வலிமை’ படப்பாடல்..!

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித், ஹ{மா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வலிமை’. இப்படத்தின் முதல் சிங்கிள் ‘நாங்க வேற மாரி’ மற்றும் படத்தின் முதல் முன்னோட்ட வீடியோ ஆகியவை இதற்கு முன்பு வெளியாகி உள்ளன. அதன்பின் எந்த ஒரு வீடியோவும் வெளியிடப்படவில்லை.


இந்நிலையில் வலிமை படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது. அம்மாவை போற்றும் விதமாக உருவாகி உள்ள இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். ‘நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ’ என அஜித் பேசுவதைத் தொடர்ந்து, பாடலும் அப்படியே ஆரம்பிக்கிறது.

நேற்று மாலை வெளியிடப்பட்ட இந்த பாடல் யூடியூபில் இன்று காலைக்குள் (15 மணிநேரத்தில்) 22 மில்லியன் பார்வையாளர்களையும் 4 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது. மேலும் டிரெண்டிங்கில் முதல் இடத்திலேயே இருந்து வருகிறது.