• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உலககோப்பை கால்பந்து போட்டியில் அஜித்தின் துணிவு

ByA.Tamilselvan

Dec 6, 2022

பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ள அஜித்தின் துணிவு படத்தை உலககோப்பை கால்பந்து மைதானத்தில் விளம்பரப்படுத்திய ரசிகர்.
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் துணிவு. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.படப்பிடிப்பு முடிந்து தற்போது இப்படத்தின் பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படம் வருகிற பொங்கலுக்கு பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.ஏற்கனவே சபரிமலையில் படத்தின் வெற்றிக்காக வேண்டுதல் செய்த ரசிகரின் படம் வெளியானது.
இந்நிலையில், அஜித்தின் ரசிகர் ஒருவர் Fifa கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் ‘Waiting For Thunivu Pongal’ என்று ஒரு துணியில் எழுதி அதனை அந்த போட்டி நடைபெறும் பொழுது அரங்கத்தில் காட்டியுள்ளார்.
அதனை புகைப்படம் எடுத்து தற்போது சமூக வலைத்தளத்திலும் அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.