சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில், உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக சென்றடையும் வகையில், அவர்கள் இருக்கும் இடத்திலேயே உயிர்காக்கும் சிகிச்சையை உடனடியாக தொடங்கும் “பக்கவாத சிகிச்சைக்கான நடமாடும் வாகன சேவை” தொடங்கப்பட்டது. அதேபோல் “புது தொடக்கங்கள்” என்ற பெயரில் ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இவ்விரு சேவைகளையும் ரேலா மருத்துவமனையின் தலைவர் பேராசிரியர் முகமது ரேலா முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியதாவது:
“பக்கவாதம் வராமல் தடுப்பதற்காக மருத்துவர்கள் கூறுவதாவது இரண்டு வழிமுறைகள் உள்ளன. அதில் உடல் செயல்பாடுகள் மற்றும் ஆரோக்கியத்தை அவ்வப்போது பரிசோதனை செய்வது மிக முக்கியம்.

முக்கியமாக சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், மற்றும் குடும்ப பக்கவாதம் வரலாறு உள்ளவர்கள் அனைவரும் அவ்வப்போது உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
அதேபோல், செய்யக் கூடாத இரண்டு விஷயங்களாக — எந்த வகையான அறிகுறியையும் புறக்கணிக்கக் கூடாது; உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும்.

இரண்டாவதாக, சுயமருத்துவம் செய்யக் கூடாது; அது மிகவும் ஆபத்தானது. பக்கவாதம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்,” என்று அவர் அறிவுறுத்தினார்.













; ?>)
; ?>)
; ?>)