• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இயக்குநர் பாலாவுடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்…

Byமதி

Oct 19, 2021

நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் பாலா ஒன்றாக இணைந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். அந்த வரிசையில் மீண்டும் இருவரும் கைகோர்த்து உள்ளனர்.

நடிகர் சூர்யா தனது 2d என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ள படத்தை பாலா இயக்குகிறார். அப்படத்தில் பாலாவின் பரதேசி படத்தில் நடித்த அதர்வா நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற டிசம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இப்படத்தில் நடிகர் சூர்யாவும் கெஸ்ட் ரோலில் நடிப்பார் என கூறப்படுகிறது.