• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தனுஷ் இல்லாமல் தீபாவளி கொண்டாடிய ஐஸ்வர்யா !!!

ByA.Tamilselvan

Oct 26, 2022

தனுஷ் – ஐஸ்வர்யா தங்களுடைய விவாகரத்தை அறிவித்த பிறகு இந்த ஆண்டு தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை ஐஸ்வர்யா வெளியிட்டுள்ளார்.
தனுஷ் – ஐஸ்வர்யா சில மாதங்களுக்கு முன் தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
என்ன ஆனதோ ஏதானதோ 18 ஆண்டு திருமண வாழ்வை முறித்துக்கொண்டனர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி. இருவர் முடிவிலும் தந்தை ரஜினிகாந்த் தலையிடவில்லை. உலகம் அறிந்தவர்கள் முடிவு உங்கள் கையில் ஆனால் பொதுவெளியில் எதுவும் அவதூறாக பேசக்கூடாது. பேரன்கள் வாழ்க்கையும் முக்கியம் என ரஜினிகாந்த் கூறிவிட்டதால் இருவரும் இதுவரை எதுவும் பொதுவெளியில் பேசாமல் மவுனம் காக்கின்றனர். பிள்ளைகள் தேவைப்பட்ட பொழுது அப்பா தனுஷை சென்று பார்க்கிறார்கள்.இந்நிலையில் தற்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பை இருவரும் வெளியிடவுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இரண்டு மகன்களுடன் ஒன்றாக அனைவரும் கடந்த ஆண்டு கொண்டாடிய தீபாவளி போல் இந்த ஆண்டு இல்லை. ஆனால் ஐஸ்வர்யா தனது தந்தை ரஜினிகாந்த் தாயார் லதா மற்றும் மகன்களுடன் சந்தோஷமாக தீபாவளியை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை ட்வீட் செய்துள்ளார். அதில் பேரன்கள் கொண்டாடுவதை தாத்தா ரஜினிகாந்த் சந்தோஷம் பொங்க பார்ப்பது தெரிகிறது.


தீபாவளி அன்று தனது மகன்களுடன் இணைந்து தீபாவளி கொண்டாடியுள்ளார் ஐஸ்வர்யா. இந்த கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.இதில் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ஆகியோருடன் தனுஷின் மகன்கள் யாத்ரா, லிங்கா இருவரும் இருக்கும் இந்த புகைப்படத்தில் தனுஷ் மட்டும் இல்லை.