• Fri. Apr 18th, 2025

பிரதமரின் காருக்கு பின்னால் நடந்து சென்ற முதல்வரின் பரிதாப நிலை- வைரல் வீடியோ

ByA.Tamilselvan

Oct 26, 2022

குஜராத்தில் பிரதமரின் காருக்கு அம்மாநில முதலமைச்சரை நடந்து வரசெய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 19-ம் தேதி குஜராத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்றார். பிரதமரை அம்மாநில முதல்வர் பூபேந்திரபாய் பட்டேல் வரவேற்றார். அப்போது பிரதமரின் காரில் ஏறுவதற்காக ஓடி வந்து கதவை திறக்க முயன்றார். காரில் எற முயன்ற முதலமைச்சரை பாதுகாப்புப் படை வீரர்கள் தடுத்து நிறுத்தி காருக்கு பின்னால் நடந்துவரச்செய்தனர். இதனால் முதல்வர் பட்டேல் அதிர்ச்சி அடைந்தார். இருந்தாலும் வேறு வழியின்றி பிரதமர் மோடியின் காரின் பின்னாக முதல்வர் நடந்து சென்றார். இது அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது.
மெதுவாகச்சென்ற காரில் நின்றபடி மோடி பொதுமக்களுக்கு வணக்கம் செலுத்தினார். காருக்குபின்னால் பூபேந்திரபடேல் தனியாக நடந்து வந்தார். இது முதலமைச்சரை அவமதிக்கும் செயல் என காங்கிரஸூம், ஆம்ஆத்மியும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த வீடியோவை தற்போது காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டு கிண்டல் செய்துள்ளது. அதில், குஜராத் முதல்வரின் பெயர் நினைவில் இல்லை. கூகுள் செய்து பாருங்கள். கூகுள் கொடுத்த பெயர், வீடியோவில் அதே நபர் காரில் உட்கார முயல்கிறார். இது யாருடைய கார். உங்களுக்கு தெரியும்” என்று கிண்டலாக பதிவு செய்துள்ளது காங்கிரஸ் கட்சி. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.