• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி

Byவிஷா

Oct 7, 2024

கொல்கத்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கும் வகையில், தலைநகர் டெல்லியில் நாளை மறுநாள் (அக்.9) எய்ம்ஸ் மருத்துவர்கள் மெழுவர்த்தி ஏந்தி பேரணி நடத்த உள்ளனர்.
கடந்த ஆகஸ்டு 9 ஆம் தேதி அதிகாலையில் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. இதில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.
கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து இவ்வழக்கில் சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது.
டாக்டர்களின் பாதுகாப்பு மற்றும் பிற விவகாரங்கள் தொடர்புடைய அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படி தேசிய பணிக்குழுவை சுப்ரீம் கோர்ட்டு கடந்த வாரம் திங்கட்கிழமை கேட்டு கொண்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் பிற நீதிபதிகளான பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருவதன் ஒரு பகுதியாக இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பயிற்சி டாக்டர்கள் நாளை மறுநாள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக செல்ல உள்ளனர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பயிற்சி டாக்டர்கள் கூட்டமைப்பு,
“இந்த விவகாரத்தில் நீதி கோரி, துணிச்சலாக உண்ணாவிரத போராட்டம் தொடங்கி தெரிவிக்கிறோம். மேற்கு வங்காள பயிற்சி டாக்டர்களுக்கு எங்களுடைய ஈடுஇணையற்ற ஆதரவை வழங்குகிறோம். இதன்படி, டெல்லியில் உள்ள ஜே.எல்.என். ஆடிட்டோரியத்தில் இருந்து நாளை மறுநாள் மாலை 6 மணியளவில் மெழுகுவர்த்தி ஏந்தி செல்லும் பேரணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த பயங்கர சம்பவத்தில் நீதி வழங்கப்படாத நிலையில், கவனம் ஈர்க்கும் வகையிலான இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொண்ட அவர்களது துணிச்சலான முடிவை நாங்கள் பாராட்டுகிறோம்.
நீதியை பாதுகாக்க போதிய நடவடிக்கைகள் இல்லாத சூழலை உணர்ந்துள்ள பயிற்சி டாக்டர்களின் உதவியற்ற நிலையை இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது
என அறிவித்துள்ளது.