• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மஞ்சூரில் ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் இன்கோ தேயிலை தொழிற்சாலை முன்பு தமிழ்நாடு அரசு 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேர வேலையாக உயர்த்தி தொழிற்சாலை தொழிலாளர்கள் சட்டத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றியதை ரத்து செய்ய கோரி தமிழ்நாடெங்கும் AITUC தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் வருகின்றன
அதன் ஒரு பகுதியாக இன்று 21. 04.2023 நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா மஞ்சூர் தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை முன்பு காலை 8.30 மணிக்கு தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் ஜி.ஆர். JIO Indco 7 AITUC தலைவர் தலைமை தாங்கினார். பி. சிவராஜ், ஆர்.சுந்தரம், மனோகரன்,அ.மாலா,பத்மகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.ரகுநாதன் ஊராட்சி சங்க பொது செயலாளர் கே.எம்.ஆரி கட்டட சங்கம் மாவட்ட செயலாளர் L.சிவகுமார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி விளக்கிப் பேசினார்கள்.கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீதாலட்சுமி,சகுந்தலா,மல்லிகா, லதா,தங்கராசு, விசுவநாதன், சைனாபானு,கலா, சுசிலா, சரோஜா, நவமணி, பிரேமா, மேனகா, பவித்ரா, வசந்தம்மலர் உள்ளிட்ட 34 பெண்கள் 18 ஆண்கள் மொத்தம் 52 பேர் கலந்து கொண்டனர் மனோகரன் நன்றி கூறி ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.