அலங்காநல்லூர் அருகே முடுவார் பட்டியில் அதிமுக சார்பில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழாவில் ஆர்.பி உதயகுமார் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய அதிமுக சார்பில் முடுவார் பட்டியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் எம்எல்ஏ கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்புரையாற்றினார். முன்னாள் எம்எல்ஏக்கள், எம்.வி.கருப்பையா மாணிக்கம் அலங்காநல்லூர் பேரூர் செயலாளர் அழகுராஜா, வாடிப்பட்டி யூனியன் முன்னாள் சேர்மன் ராஜேஷ் கண்ணா, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், திருமங்கலம் திருப்பதி, புளியங்குளம் ராமகிருஷ்ணன், விருகை தருமர், மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் வாவிடமருதூர், ஆர்.பி.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் நாட்டாமை சுந்தர் ராகவன் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் முடுவார்பட்டி ஜெயச்சந்திரன் மணியன், அலங்காநல்லூர் ஒன்றிய விவசாய அணி துணைச் செயலாளர் கே. பாலமுருகன், முடுவார் பட்டி கே.கே. காமாட்சி துணைச் செயலாளர் சந்திரன் ஜெயபிரகாஷ், குருவித்துறை வழக்கறிஞர் காசிநாதன், மகளிர் அணி உமா ஸ்ரீ, மாரி, ரேவதி கிளைக் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
