• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அதிமுக சார்பில் திண்ணை பிரசாரம்..,

ByVasanth Siddharthan

Apr 26, 2025

புரட்சித் தமிழர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி ஆணைக்கிணங்க நத்தம் விசுவநாதன் வழிகாட்டுதலின்படி பழனி அருகே பாலசமுத்திரத்தில் அதிமுக சார்பில் திண்ணை பிரசாரம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கழக அம்மா பேரவை இணை செயலாளரும் நத்தம் ஒன்றிய பெருந்தலைவர் R.V.N. கண்ணன் பங்கேற்று பேசியபோது : குடும்பத் தலைவிகளுக்கு திமுக அரசு இரண்டு ஆண்டுகளாக ஆயிரம் ரூபாய் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர் இந்த நிலையில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கூறி ஏமாற்றிய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில் உடனடியாக திமுக அரசு பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கியதை குறிப்பிடத்தக்கது.

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்யப்படும் என பொய்யான வாக்குறுதியை திமுகவினர் அளித்தனர். திமுக கொடுத்த பொய்யான வாக்குறுதி நம்பி நீட் தேர்வில் எழுதும் மாணவர்கள் இறப்பை சந்தித்து வருகின்றனர் என வருத்தத்துடன் தெரிவித்தார் .அரசு பேருந்தில் மகளீருக்கு இலவசம் என்று கூறிவிட்டு தற்போது நகர பேருந்துகள் பாதி பேருந்துகள் இயக்கத்தை நிறுத்திவிட்டார்கள். எடப்பாடி ஆட்சியில் தான் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 இட ஒதுக்கீடு வாங்கி தந்தவர் எடப்பாடி பழனிச்சாமி என பெருமையுடன் தெரிவித்தார் ,அதேபோல வீட்டுவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என அனைத்து உயர்ந்திவிட்டனர். மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். ஆயிரம் ரூபாய் கொடுப்பதால் மகளிர் திமுகவுக்கு வாக்கு அளித்துவிடுவார்கள் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர் அது நடைபெறாது. மகளீர் திமுக அரசின் மீது வெறுப்பில் உள்ளனர்.

ஆட்சிக்கு வந்தால் மதுகடைகள் படி படியாக குறைப்போம் என்றார்கள் , ஆனால் மதுகடைகளை குறைக்க வில்லை , மது கடைகள் 24 மணி நேரமும் திறந்து தாராளமாக மது விற்பனை நடைபெறுகிறது.

திமுக ஆட்சியின் அவலங்கள் குறித்து துண்டு பிரச்சாரம் வழங்கப்பட்டது.

எடப்பாடி முதல்வராக இருந்தபோது மகளீருக்கு பல திட்டங்கள் செயல்படுத்தினோம். தாலிக்கு தங்கம், கல்லூரி மாணவிகளுக்கு மடிகணினி, அம்மா உணவகம் என பல திட்டங்கள் செயல்படுத்தினோம்.