அரியாங்குப்பம் பி.சி.பி. நகர் 3-வது குறுக்கு வீதியை சேர்ந்த வர் ராஜேஷ் (வயது 40). பிளம்பர். அவரது மனைவி கமலி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலை யில்ராஜேசின் தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை கவனித்துக் கொள்ள கமலி ஆஸ்பத்திரிக்கு சென்றார். நேற்று மாலை ராஜேசும் ஆஸ்பத்திரிக்கு சென்ற நிலையில் வீட்டில் குழந்தைகள் 2 பேர் மட்டும் தனியாக இருந்தனர். அப்போது வீட்டின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த 2 பேரும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க ர முயன்றனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை அணைக்க முடியவில்லை.

இதுகுறித்து புதுச்சேரிதீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர் கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப் பினும் வீட்டில் இருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடிசையை அதிமுக மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன் நேரில் பார்வை யிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி பண உதவி மற்றும் பொருள் உதவி நிவாரணம் வழங்கினார். அருகில் தொகுதி செயலாளர் ராஜா மற்றும். அவைத் தலைவர் ராஜேந்திரன் வார்டு செயலாளர் பாலு ஜெயக்குமார் மற்றும் அஜித் குமார் முத்துலிங்கம் கணபதி பரமசிவம் காத்தவராயன் மற்றும தொகுதி கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.