• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அதிமுக பாமக கூட்டணி உறுதி ! பாமக உற்சாக கொண்டாட்டம் !

ByAnandakumar

Jan 7, 2026

சென்னை பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று காலை நேரில் சென்று சந்திப்பு நடத்தினார்.

இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது. இந்தச் சந்திப்புக்குப் பின்னர், எடப்பாடி பழனிசாமியும் அன்புமணி ராமதாஸும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து தங்களது கூட்டணி குறித்த நிலைப்பாட்டை விளக்கினர். இந்நிலையில், இந்த கூட்டணி அறிவிப்பினை தொடர்ந்து கரூரில் பாமக கட்சியினர் மாவட்ட செயலாளர் கொங்கு பிரேம்நாத் தலைமையில் ஆங்காங்கே பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். கரூர் மாவட்ட பாமக செயலாளர் கொங்கு பிரேம்நாத் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, பாட்டாளிகளுக்கு மகிழ்ச்சியான தினம் இன்று மகிழ்ச்சியான தினம், ஏனென்றால் பாட்டாளிகளுக்கு நிரந்தர ஒப்பற்ற தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இன்று அதிமுக தலைமையிலான கூட்டணியை அறிவித்துள்ளார். அதிமுக, பாஜக, பாமக கட்சிகள் இணைந்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளனர். இன்னும் பல கட்சிகள் இக்கூட்டணியில் இணைய உள்ளனர். திமுக அரசின் மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். கடும் வெறுப்பிலும் உள்ளனர். எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கஞ்சா, போதை வஸ்துக்கள் என ஏராளமானவை தமிழகத்தில் அதிகரித்துள்ளன. காவல்துறை மீதும், அரசின் மீதும், அரசு அதிகாரிகள் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர்.

மேலும், தேர்தல் வருவதையொட்டி தற்போது மட்டும் ரூ 3 ஆயிரம் பொங்கலுக்கு கொடுக்கின்றார்கள் என்றும் அனைத்து திமுக மந்திரிகளும் பல கோடி ரூபாய் ஊழலில் சிக்கி உள்ளனர். திமுக போட்டியிடும் 234 தொகுதிகளிலும் இந்த தேர்தலில் டெபாசிட் இழக்கும், இந்த முறை அதிமுக, பாஜக, பாமக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும், இந்த கூட்டணிக்காக கரூர் மக்கள் சார்பாக நன்றியையும் பாராட்டுகளையும் தான் தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.