• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி..

ByKalamegam Viswanathan

Oct 23, 2024

மதுரையில் திருப்பரங்குன்ற கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, வரும் 7,8 திருமணங்கள் நடத்துவதற்கு வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் கோவிலிலே திருமணம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். திருப்பரங்குன்றம் கோவில் சுற்றி உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

திருப்பரங்குன்றம் கோவிலில் கும்பாபிஷேகம் மிக விரைவில் நடத்த இந்த அரசு ஏற்பாடு செய்யும் என நம்புகிறேன். திமுக ஆட்சியின் சிறப்பாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.

தேவருக்கு ஒரு பூஜையை முன்னிட்டு, அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. சிறப்பாக வரவேற்க உள்ளனர்.

எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை அனுமந்த ராவ் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக கடிதம் நான் அனுப்பியுள்ளேன்.

எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து முறையாக அறிவிப்புகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சரியான தகவல்களை தற்போது வரை கொடுக்கவில்லை.

தென்கால் கண்மாயில் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.. விபத்துக்கான சாலையாகவே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தென்கால் கண்மையில் இருந்து விவசாய பாசனத்திற்கான மடையையும் முழுமையாக அடைத்துள்ளனர்.

கண்மாயிலிருந்து மணல் கடத்தப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினருக்கும் நெடுஞ்சாலை தருணிற்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு வருகிறது வழக்கு பதிவு உள்ளது.

திருப்பரங்குன்றம் கோவிலுக்கான ரோப் கார் திட்டம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வருவதால் சாலைகளின் மோசமான நிலை ஏற்பட்டு வருகிறது.

திமுக உருவாக்கிய கலைஞர் படிப்பகம் மற்றும் ஜல்லிக்கட்டு மைதானம் பயனற்று கிடைக்கிறது.

தினகரன் ஓபிஎஸ் சசிகலா இணைவதால் மீண்டும் குழப்பம் தான் வரும் இரட்டை தலைமை வருவதால் மீண்டும் பிரச்சனை தான் வரும். அமலாக்கத் துறையினருக்கு புதிய தகவல் கிடைத்திருப்பதால் தான் வைத்தியலிங்கம் அவர்களின் வீட்டிற்கு சோதனை செய்திருக்கலாமா..?