• Sat. Dec 6th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அதிமுகவினர் மலர் தூவி மௌன அஞ்சலி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அம்மா உணவகம் அருகே இராஜபாளையம் தெற்கு நகர கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் அதிமுக ஜெயலலிதாவின் ஒன்பதாவது ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக அலங்கரிக்கப்பட்டது ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி கற்பூரம் காட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது

நிகழ்ச்சி ஏற்பாடுகளை இராஜபாளையம் தெற்கு நகர கழக செயலாளர் பரமசிவம் செய்திருந்தார் நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர்
என் எம் கிருஷ்ணராஜ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் இராஜபாளையம் வடக்கு நகர கழகம் சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகே வடக்கு நகர செயலாளர் வழக்கறிஞர் முருகேசன் தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செய்து அன்னதானம் வழங்கினர் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் வனராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதை போல் செட்டியார்பட்டி .சேத்தூர் .சொக்கநாதன்புத்தூர் .
உள்ளிட்ட பகுதிகளிலும் நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது

இந்த நிகழ்ச்சி சிறப்புரையற்றிய மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ்

அம்மா உணவுகத்தில் அம்மாவின் புகைப்படத்தை அளிக்கலாம் அம்மா உணவகம் என்ற பெயரை அளிக்க முடியாது. ஆளுங்கட்சி எத்தனையோ அம்மா கொடுத்த திட்டத்தை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது. ஆனால் அம்மா உணவகத்தை அவர்களால் தொடக் கூட முடியவில்லை. இது மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற திட்டம் அம்மா உணவகத்தை மூடினால் மாபெரும் போராட்டம் நடக்கும் என்பது ஆளுங்கட்சிக்கு தெரியும். அதனால் தான் அதை தொட முடியவில்லை. மேலும் வருகின்ற 2026 ஆம் தேர்தலில் எடப்பாடி முதலமைச்சராவது உறுதி அதற்கு ஒற்றுமையாக பாடுபட வேண்டுமென சிறப்புரையாற்றினார்.