• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கொலை வழக்கில் அதிமுகவை சேர்ந்த உதயகுமாருக்கு ஆயுள் தண்டனை…

கொலை வழக்கில் அதிமுகவை சேர்ந்த உதயகுமாருக்கு ஆயூள் தண்டனை. கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு பெற்றார்.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் IPS முக்கியமான கடுமையான குற்றங்களில் நீதிமன்ற விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை காவல் நிலையத்தில் 28.10.2017 அன்று மனைவியின் கள்ளகாதலை கண்டித்த கணவனை, கள்ளகாதலனும் அவரது நண்பரும் சோ்ந்து அடித்து கொலை செய்த வழக்கு கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம், குழித்துறையில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் (07.12.2024) ம் தேதி கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தால் தீா்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தீா்ப்பின்படி A1 உதய குமார் (48) என்பவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. A2 பிஜு (இறந்து விட்டாா்).

இவ்வழக்கில் சாட்சி மற்றும் வழக்கு விசாரணைக்கு உறுதுணையாக இருந்து வழக்கை விரைந்து முடிக்க காரணமாக இருந்த நீதிமன்ற காவலா் SSI .எல்டா் லியோ மனோகா், காவல் ஆய்வாளா் பாலமுருகன் மற்றும் மாா்த்தாண்டம் உட்கோட்ட துணைகாவலர்கள் பாராட்டப்பட்டார்கள்