சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயின்று முதல் மதிப்பெண் பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்குவதாக சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் கடந்த ஆண்டு பள்ளி மாணவர்களிடம் வாக்குறுதி அளித்தார். அதனடிப்படையில் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 24 பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று விசாலயன்கோட்டை, காளையார்கோவில் சிலுக்கபட்டி, மறவமங்கலம், காளையார்கோவில், மல்லல், கொல்லங்குடி, பாகனேரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களை சந்தித்து பரிசுத் தொகை பத்தாயிரம் ரூபாய் வழங்கி ஊக்கப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோ மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் ஸ்டீபன், சிவாஜி, சேவியர்தாஸ்,செல்வமணி மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

