• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அதிமுக உயிர் வாழ்வதற்கு போராடிக் கொண்டிருக்கின்றது-மதுரையில் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி

ByKalamegam Viswanathan

Mar 20, 2023

சென்னையில் இருந்து மதுரை வந்த தமிழ்நாடு மாநில சிறுபான்மையின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மதுரை நிலையத்தில் பேட்டி. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்.
சாதி வாரி கணக்கெடுப்பை இப்பொழுது காங்கிரசு கட்சியும் ஆதரிக்கிறது.அதிகாரப் பங்கீடு என்பது இன்னும் குறிப்பிட்ட சாதியினருக்கு கொடுக்கப்படவில்லை. 75 ஆண்டு சுதந்திரங்களுக்கு பின்னரும் உயர்கல்வி நிறங்களான ஐ.ஐ.டி , ஐ. ஐ.எம் போன்ற கல்வி நிறுவனங்களில் உயர்நீதிமன்ற உச்ச நீதிமன்றகளிலும் இன்னும் அந்தந்த மக்கள் தொகை ஏற்ப விருதாச்சலத்திற்கு ஏற்ப பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பதை உண்மை.அத்தைய மக்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கான தரவுகள் வேண்டும் என்கிற நிலைப்பாட்டிற்காகவே சாதி வாரி கணக்கெடுப்பை ஆதரிக்கிறோம்.
வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடக்கூடிய பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது இதனால் நம் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் குறித்த கேள்விக்கு
நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் திமுக அரசுக்கு முதல்வர் செயல்பாட்டுக்கு மக்கள் தந்திருக்கும் அங்கீகாரமாக பார்க்கிறேன். அமைச்சர்கள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் வேகமாகவும் ஆர்வத்தோடும் வேலை செய்த போதிலும் கூட மக்கள் தந்திருக்கும் பெருவாரியான தீர்ப்பு என்பது மக்கள் செல்வாக்கு திமுக அரசுக்கும்,, முதல்வருக்கும் அபரிவிதமாக இருக்கிறது என்பதுதான் இந்த இடைத்தேர்தல் சொல்கிறது. அது நிச்சயமாக நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்.
மேலும் அதிமுக உயிர் வாழ்வதற்கு போராடிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் தங்களுடைய அடையாளத்திற்காக, அதிகார பங்கீட்டுக்காக அவர்கள் தொடர்ந்து ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டிருக்கும் சூழலில் இன்றைக்கு திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வெற்றிப் பயணம் என்பது பாராளுமன்றத் தேர்தலிலும் நிச்சயமாக தொடரும். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் மக்கள் நீதி மைய கூட்டணி இருக்குமா என்ற கேள்விக்கு:
கூட்டணி பொறுத்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சித் தலைவர்கள் சேர்ந்து முடிவு செய்வார்கள்.