• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அதிமுக பொதுக்குழு வழக்கு.. மேல்முறையீட்டில் இன்று இறுதி விசாரணை!

Byகாயத்ரி

Aug 25, 2022

அதிமுக பொதுக்குழு தொடர்பாக பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது.

கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையை தொடர வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார் . இதன் மூலம் அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது ரத்தானது . இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் . இந்த வழக்கு நீதிபதிகள் எம். துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 23ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்திடம் ஓபிஎஸ் தரப்போ , மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராக இருப்பதால் வழக்கை ஒத்தி வைக்க கோரிக்கை வைத்தது.

இக்கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான ஈபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இரு தரப்பிற்கும் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது.