• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ராஷச பலூனை வானில் பறக்கவிட்ட அதிமுக நிர்வாகிகள்

Byரீகன்

Aug 21, 2025

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக கழக பொதுச் செயலாளருமான எடப்பாடி “மக்களை காப்போம்” “தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்தை முன்னிறுத்தி, புரட்சி தமிழரின் எழுச்சி பயணம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துறையூர் பேருந்து நிலையம் அருகே மக்களை சந்திக்க இருக்கிறார்.

இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு வகையில் எடப்பாடியாருக்கு சுவரொட்டிகள், பிளக்ஸ் பேனர்கள் கட் அவுட்டுகள் ஆகியவற்றின் மூலம் தங்களது வரவேற்பை காட்டி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி பொருளாளர் ராமசாமி துறையூர் நகர பகுதியில் ராட்சச பலூனை வானில் இன்று பறக்க விட்டு தனது வரவேற்பை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பொன்.காமராஜ், அழகாபுரி செல்வராஜ், ராயல் பாஸ்கர், முன்னாள் சேர்மன் மனோகரன், விவேக், ஷோபனாபுரம் திருப்பதி, ஆனந்த், மற்றும் வழக்கறிஞர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு ராஷச பலூனை வானில் பறக்க விட்டு மகிழ்ந்தனர்.