செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பல்லாவரம் தொகுதி திருநீர்மலை அதிமுக வட்டக் கழகம் சார்பில் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. ப.தன்சிங், மாவட்ட ஐ.டி. பிரிவு பொறுப்பாளர் பூவரசன், கீழ்கட்டளை பகுதி செயலாளர் சந்திரசேகர் ராஜா, குரோம்பேட்டை துணை செயலாளர் J.P.பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

நிகழ்ச்சியில் லோகநாதன், பாஸ்கர், சண்முகம் (Ex MC), சுரேஷ், தங்க ஏழுமலை (Ex MC), வட்ட செயலாளர்கள் லிங்கமூர்த்தி, வடிவேல் ரமேஷ், சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இறுதியில் பகுதி பொருளாளர் வீசி சண்முகம் நன்றி தெரிவித்தார்.













; ?>)
; ?>)
; ?>)