


நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், அதிமுக தரப்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனுக்களை விநியோகம் செய்ய உள்ளனர்.
இதுகுறித்து அதிமுக தரப்பில் கூறுகையில், “நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று முதல் விருப்பமனு பெற்று கொள்ளலாம்.
பொதுத்தொகுதிக்கு வேட்பாளர் கட்டணமாக ரூ.20 ஆயிரமும், தனித்தொகுதிக்கு வேட்பாளர் கட்டணமாக ரூ.15 ஆயிரமும் செலுத்தவேண்டும். உரிய கட்டணங்களை செலுத்தி அதிமுகவினர் விருப்ப மனுக்களை பெறலாம். இன்று முதல் மார்ச் 1 ஆம் தேதி வரை விருப்பமனுக்கள் விநியோகம் செய்யப்படும்” என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

