சிவகங்கை பாராளுமன்ற வேட்பாளராக சேவியர்தாஸ் அதிமுக கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டு நேற்று திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில் இன்று முன்னாள் அமைச்சர்கள் பாஸ்கரன் , ராதாகிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கூட்டணி கட்சியினர் புடைசூழ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆஷா அஜித்திடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.