• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அதிமுக 52வது தொடக்க விழா பொதுக்கூட்டம் , 1500பெண்களுக்கு இலவச சேலை..,

ByG.Suresh

Nov 6, 2023

அஇஅதிமுக 52வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் கல்லல் தெற்கு ஒன்றியம் சார்பில் கல்லல் பேருந்து நிலையம் அருகே ஒன்றிய செயலாளர் பனங்குடி சேவியர் தாஸ் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன்,கொள்கை பரப்பு துணை செயலாளர் முன்னாள் அமைச்சர்.மாப.பாண்டியராஜன். மின்னல் மினாட்சிசுந்தரம், கூட்டத்தில் பூவை செழியன் சிறப்புரையாற்றினார்.

இதனை அடுத்து பேசிய முன்னாள் அமைச்சர் பாண்டிய ராஜன் புரட்சி தமிழர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் வருடத்திற்கு 600 கிராமப்புற மிகவும் பின்தங்கிய மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கினார். அதிமுக பொதுக் கூட்டங்களுக்கு அதிகளவில் பெண்கள் கலந்து கொள்கின்றனர். காரணம் பெண்களை தாயாக மதிக்க புரட்சி தலைவர் தொண்டர்களுக்கு கற்றுக் கொடுத்தார். ஆனால் திமுக வினர் கூட்டத்திற்கு பாதுகாப்புக்கு வந்த பெண் காவலர்களை சில்மிஷம் செய்து சிறையில் உள்ளனர் என்றும் புரட்சி தலைவி அம்மா அவர்கள் பெண்களுக்காக பதினாறு திட்டங்களை செயல்படுத்தினார். குறிப்பாக தாலிக்கு தங்கம் திட்டம் இதன் மூலம் இந்தியாவிலேயே தமிழகத்தில் உயர் கல்வியில் 52 சதவீதம் பெண் கல்வியை ஊக்கப்படுத்தினார். திமுக அரசு இவற்றை எல்லாம் அடியோடு நிறுத்தி விட்டார்கள் என்ன பேசினார்.
இக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உமாதேவன் நாகராஜன்.மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், நகர செயலாளர் ராஜா சிங்கம்புணரி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெகன், ஒன்றிய செயலாளர்கள், கருணாகரன், அருள்ஸ்டிபன், சிவாஜி, கோபி, செல்வமணி, சோனைரவி, தகவல் தொழில்நுட்ப பிரிவு தமிழ்செல்வன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சங்கர்ராமநாதன், குழந்தை மாவட்ட பாசறை இணை செயலாளர் பிரபு, நகர ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது.