மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட, 17 பேர் கொண்ட 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.
நேற்று 16 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள தொகுதிகளுக்கான 17 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று (வியாழக்கிழமை) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அத்துடன் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் வேட்பாளரை அறிவித்துள்ளது அதிமுக. அதன் விவரம்:
வேட்பாளர்கள் பட்டியல்…
ஸ்ரீபெரும்புதூர் - டாக்டர் பிரேம்குமார்
வேலூர் - டாக்டர் பசுபதி
தருமபுரி - டாக்டர் அசோகன்
திருவண்ணாமலை - கலியபெருமாள்
கள்ளக்குறிச்சி - குமரகுரு
திருப்பூர் - அருணாச்சலம்
நீலகிரி (தனி) - லோகேஷ் தமிழ்ச்செல்வன்
கோவை - சிங்கை ராமச்சந்திரன்
பொள்ளாச்சி - கார்த்திகேயன்
திருச்சி - கருப்பையா
பெரம்பலூர் - சந்திரமோகன்
மயிலாடுதுறை - பாபு
சிவகங்கை - சேவியர்தாஸ்
தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி
நெல்லை - சிம்லா முத்துசோழன்
கன்னியாகுமரி - பசிலியன் நசரேத்
புதுச்சேரி - தமிழ்வேந்தன்
விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ராணி என்பவர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக 33 தொகுதிகளில் போட்டி: அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. அதன்படி திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது.
அதேபோல், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
மீதமுள்ள 33 இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது. இந்த 33 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.