• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வேலைவாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தப் போகும் ஏஐ தொழில்நுட்பம்

Byவிஷா

May 15, 2024

வேலைவாய்ப்பு சார்ந்த சந்தையில், உலக அளவில் சுனாமி போன்ற தாக்கத்தை ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் ஏற்படுத்தும் என சர்வதேச செலவாணி நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினாஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.
தற்போது தொழில்நுட்பம் ஆனது நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வருகிறது. எல்லா இடங்களிலும் AI எனப்படும் Artificial Intelligence சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் வேலையே மிக குறுகிய நேரத்தில் செய்து முடிகிறது இந்த ஏஐ. இதனால் அதற்கான பயனர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இதனால் பலருக்கும் வேலை இல்லா சூழல் உருவாகும் என பெரும் கருத்து எழுந்தது. எனவே தற்போது AI பயன்பாட்டை பயில ஆர்வம் காட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உலக அளவில் சுனாமி போன்ற தாக்கத்தை வேலைவாய்ப்பு சார்ந்த சந்தையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்படுத்தும் என சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.இந்த மாற்றம் ஆனது வெகு விரைவில் நடைபெறும் என்றும், அதற்கு மக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், முன்னணி டெக் நிறுவனங்கள் புதிய மற்றும் அதி சக்தி வாய்ந்த ஏஐ மாடல் வெர்ஷன்களை அறிமுகம் செய்து வருகின்றன. ஆகையால், இந்த மாற்றத்துக்கு ஏற்ற வகையில் மக்களை தயார்படுத்தவும், வணிக நிறுவனங்களை தயார்படுத்தவும் குறைவான நேரம் மட்டுமே உள்ளது. அதனால், உலக அளவில் வேலைவாய்ப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஏஐ தொழில்நுட்பத்தை நாம் சரியாக நிர்வகித்தால் மட்டுமே உற்பத்தியை அதிகரிக்க முடியும். அதே சமயத்தில், ஏஐ தொழில்நுட்பம் தவறான தகவல்களை பரப்பவும், சமூகத்தில் சமத்துவமின்மையை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது என்பதால் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொழில்நுட்பவியலாளர்கள் மத்தியில் விவாதப் பொருளாகியுள்ளது.