• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அஃகேணம் திரைப்படம் செய்தியாளர்கள் சந்திப்பு..,

BySeenu

Jul 1, 2025

நடிகர் அருண் பாண்டியன் தயாரித்து திரைக்கதை எழுதி விரைவில் வெளி வர உள்ள அஃ்கேனன் திரைப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு பிராட்வே சினிமாஸ் வளாகத்தி்ல் நடைபெற்றது.

இதில் நடிகர் அருண் பாண்டியன்,படத்தின் நாயகி கீர்த்தி பாண்டியன் உட்பட திரைப்பட குழுவினர்,செய்தியாளர்களிடம் பேசினர்.

முன்னதாக வித்தியாசமான தலைப்பாக உள்ள அஃகேனன் தலைப்பு குறித்து நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் கூறுகையில், தமிழில் ஆய்த எழுத்து என்று குறிப்பிடப்படும் மூன்று புள்ளிகளாக அமைந்துள்ளதை போல இப்படத்தின் திரைக்கதையும் இருக்குமென அவர் தெரிவித்தார்…

முழுவதும். இளைஞர்கள் இணைந்து இந்த படத்தை உருவாக்கி உள்ளதாக கூறிய அவர்,எல்லா கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளதாகவும், இந்த படம் ஒரு உண்மைச்சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் என தெரிவித்தனர்.

2 மணி நேரம் பொழுது போவதற்காக வரும் ரசிகர்களை திருப்தி படுத்துவதே மட்டும் போதுமானது எனவும் அதை விடுத்து மெசேஜ் கூறுவதெல்லாம் நமது வேலை இல்லை என அவர் கூறினார்.

டூரிஸ்ட் பேமிலி போன்ற படங்கள் பெரிய அளவில் விளம்பரபடுத்தவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் போய் சேர்ந்ததாக கூறிய அவர்,நல்ல படங்களை மக்களே விளம்பர படுத்துவார்கள் என கூறினார்.

இறுதியாக படத்தின் பட்ஜெட்டில் நிறைய செலவு செய்யபட்டுள்ளது ஆனால் கேரவனுக்கு செலவு செய்யவில்லை என நகைச்சுவையாக கூறினார்.