விருதுநகர் மாவட்டம் தடுப்பு சுவர் இல்லாத அபாய நிலையில் உள்ள விவசாய கிணறு. வெம்பக்கோட்டை ஒன்றியம் வெற்றிலையூரணி ஊராட்சியை சேர்ந்த தெற்கு ஆணைகூட்டம் சிவகாசியில் இருந்து சாத்தூர் செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. தெற்கு ஆணை கூட்டம் பஸ்நிறுத்தத்தில் இருந்து விஸ்வநத்தம் செல்லும் வழியில் தடுப்புச் சுவர் இல்லாத விவசாயக் கிணறு உள்ளது. இதனால் இதன் வழியாகச் செல்லும் அரசு பஸ்கள், தனியார் பள்ளி வாகனங்கள், பட்டாசு ஆலைக்கு செல்லக்கூடிய வாகனங்கள், எதிரெதிரே வரும்போது விலக முடியாமல் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

மேலும் இரவு நேரங்களிலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தெற்கு அணைகூட்டத்தில் உள்ள விவசாய கிணறு அருகே தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)