உசிலம்பட்டியில் விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் விவசாய கண்காட்சி நடத்தினர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தைப் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாபெரும் விவசாய கண்காட்சி நடைபெற்றது. தேனி, குள்ளப்புரத்தில் உள்ள வேளாண்மை தொழில்நுட்பவியல் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வரும் மாணவர்கள் தனுஷ், பாலாஜி, ரூபன், மதுகருன், அஜய், ஜாக், சிவபிரகாஷ், ஹரிபாலாஜி, முகமது பயாஷ், அதிஷ், தேவ்நாத் ஆகிய மாணவர்கள் உசிலம்பட்டி வேளாண்மை உதவி இயக்குநர் செல்வராஜ், தோட்டகலை உதவி இயக்குநர் சரவணப்பிரியா ஆகியோர் முன்னிலையில் விவசாயிகளுக்கு கண்காட்சியில் வைக்கபட்டிருந்தவைகள் குறித்து விளக்கமளித்தனர்.

இக்கண்காட்சியில் பட்டுப்பூச்சி வளர்ப்பு, இயற்கை விவசாயம், காளான் வளர்ப்பு, சொட்டுநீர் பாசனம், ஒருங்கினைந்த இயற்கை விவசாயம், நிலபோர்வை, உயிர் உரத்தின் முக்கியம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர். இதில் வேளான் துணை அலுவலர் குமரப்பன் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.