• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மீண்டும் 50 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,877 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 684 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,26,31,421 ஆக உள்ளது.

• இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 50,407 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 44,877 ஆக குறைந்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 5,500 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,26,31,421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

• கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 804 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 684 ஆக குறைந்துள்ளது.இதுவரை இந்தியாவில் 5,08,665 பேர் உயிரிழந்துள்ளனர்.

• தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 1,17,591 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,15,85,711 ஆக உயர்ந்துள்ளது.

• இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நேற்று 6,10,443 ஆக இருந்த நிலையில்,தற்போது 5,37,045 ஆக குறைந்துள்ளது.

• நாடு முழுவதும் இதுவரை 1,72,81,49,447 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 49,16,801 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.