• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மார்ச் 31 பிறகு ஹால்மார்க் இல்லாத நகையை விற்க முடியாது

ByA.Tamilselvan

Mar 6, 2023

ஹால்மார்க் அடையாளம் இல்லாத நகையை மார்ச்.31க்கு பிறகு விற்க கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது
தங்க நகைகள் மற்றும் தங்கத்தில் செய்யப்பட்ட பொருட்களின் தரத்தை உறுதி செய்ய, ஹால்மார்க் முத்திரை அளிக்கும் முறை பயன்படுத்தப்படுகிறது. ஹால்மார்க் முத்திரை பெற, தனித்துவமிக்க ஆறு இலக்க எண் ஒன்று ஒவ்வொரு நகை மீதும் பொறிக்கப்படுகிறது.இதன் மூலம் அந்த நகையை உருவாக்கிய நிறுவனம் மற்றும் ஹார்ல்மார்க் முத்திரை அளித்த மையம் எது என்பதை எளிதாக கண்டறிய முடியும். நாடு முழுவதும் 940 ஹால்மார்க் முத்திரை அளிக்கும் மையங்கள் உருவாக்கப்பட்டு, செயல்பாட்டில் உள்ளன. சிறு, குறு நகை நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு ஹால்மார்க் முத்திரை பெறுவதற்கு ஆகும் கட்டணத்தில் 80 சதவீதம் வரை சலுகை அளிக்கப்படும் என்றும மத்திய அரசு அறிவித்துள்ளது. வட கிழக்கு மாநிலங்களில் 90 சதவீதம் சலுகை அளிக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இதற்கிடையே, நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகளில் ஹால்மார்க் நகைகளை மட்டுமே விற்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மார்ச் 31-க்குப் பின் ஹால்மார்க் அடையாளம் இல்லாத நகையை விற்க அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹால்மார்க்கிங் கட்டாயமாக்கப்படுவதன் மூலம் தங்க நகை வாங்குபவர்கள் ஏமாற்றப்படுவது தடுக்கப்பட்டு, நாடு முழுவதும் தங்க நகைகளின் தரத்தை ஒரே அளவில் இருக்கச் செய்ய முடியும்.