• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தீபாவளி முடிந்ததையடுத்து கோவை மாநகராட்சியில் 1,350 டன் குப்பைகள் தேக்கம் – அகற்றும் பணிகள் தீவிரம்…

BySeenu

Nov 13, 2023

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் நேற்று தீபாவளி முடிந்ததையடுத்து சுமார் 1,350 டன் குப்பைகள் தேக்கமடைந்துள்ளதாகவும் அவற்றை அகற்றப்பட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 500 முதல் 1000 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்படும். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த 2 நாளா வழக்கத்தைவிட கூடுதலாக குப்பைகள் சேர்ந்துள்ளதாகவும் நேற்று தீபாவளி நாளில் மட்டும் மொத்தம் சுமார் 1,350 டன் குப்பை சேர்ந்துள்ளதாகவும் இந்தக் குப்பைகளை இன்று காலை முதல் தூய்மைப் பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தூய்மைப் பணியாளர்கள் பண்டிகை முடிந்த கையோடு குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவம் நிலையில் சிலர் விடுப்பில் இருப்பதால் ஒரு சில இடங்களில் குப்பைகளை அகற்றும் பணிகளில் தோய்வு ஏற்பட்டுள்ளதாகவும் நாளை பணியாளர்கள் அனைவரும் பணிக்கு வந்து விடும் பட்சத்தில் அனைத்து இடங்களிலும் உள்ள குப்பைகள் அகற்றம் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.