உசிலம்பட்டியில் களப்பணி மேற்கொள்ளும் மின்வாரிய ஊழியர்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் கோட்ட செயற்பொறியாளர் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் உசிலம்பட்டி மற்றும் செக்காணூரணி உள்கோட்டத்தில் பணியாற்றும் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் களப்பணியாளர்கள், மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் பொது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் ஆலோசனை கூட்டம் உசிலம்பட்டி கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உசிலம்பட்டி கோட்ட மின்வாரியத்தில் பணியாற்றும் 200க்கும் அதிகமான மின்வாரிய ஊழியர்கள், களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
வெயில் காலத்தில் மின் தேவை அதிகரிக்க கூடும் நிலையில், மின்சார தடையை சரி செய்ய மற்றும் பழுது நீக்க செல்லும் மின் களப்பணியாளர்கள் கவணத்துடன் பணியாற்றி விபத்துகளை தவிர்க்க வேண்டும் எனவும், பாதுகாப்பாக அனைவரும் பணியாற்ற வேண்டும் என ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
உசிலம்பட்டி கோட்ட உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் செக்காணூரணி கோட்ட உதவி செயற்பொறியாளர் காசிலிங்கம் மற்றும் உதவி பொறியாளர்கள் பாதுகாப்பாக மின் பழுது பணிகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.
