அரியலூர்,அக்.31: வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், டெல்டா பகுதியிலுள்ள, மொத்தம் 41 சட்டமன்ற தொகுதிகளை திமுக வென்றெடுக்க, வாக்குச்சாவடி முகவர்கள் அயராது பாடுபட வேண்டும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் ,திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு, அரியலூர் அருகே வாலாஜா நகரம் அன்னலட்சுமி இராஜபாண்டியன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் ,திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு வேண்டுகோள் விடுத்தார்.

அரியலூர் அருகே வாலாஜா நகரம் அன்னலட்சுமி இராஜபாண்டியன் திருமண மண்டபத்தில், நடைபெற்ற வாக்குச் சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டு பேசியதாவது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணியை 6 மாதத்துக்கு முன்பு செய்திருந்தால் நாம் எதிர்க்க போவதில்லை. ஆனால் தேர்தலுக்கு 3 மாதங்களே இருக்கும் நிலையில் அவசரம் அவசரமாக இந்த பணிகளை செய்வதால் தான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார்.

அக்கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தத் தில் உள்ள சாதக பாதகங்களை எடுத்துக் கூறி ஆலோசனை நடத்த உள்ளார்.எனவே, வாக்கா ளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணியை திமுக வினர் சிறப்பாக பணி யாற்ற வேண்டும். நகராட்சி பகுதியில் 2005 ஆண்டுக்கு முன்பிருந்த வாக்காளர்கள், ஊராட்சி பகுதியில் 2002 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த வாக்காளர்கள் அப்படியே இருப்பார்கள். இது அரியலூர் மாவட்டத்தில் 57 % சதவீத வாக்காளர்களாக உள்ளனர். மீதமுள்ள 43% சதவீத வாக்காளர்களை தான் நாம் சரி பார்க்க வேண்டும்.இதில் வாக்குச்சாவடி முகவர்களின் பங்கு முக்கியமானதாகும். இதில் யாரை சேர்க்க வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் யாரை சேர்த்து விடக்கூடாது என்பது தான் முக்கியம். இதில் கவனமாக இருக்க வேண்டும். வட மாநில தொழிலாளர்களுக்கு வாக்கை கொடுங்கள் என்று சொன்னால் அது சரியாக இருக்காது.
சிறுபான்மையின மக்கள் திமுகவுக்கு அதிகமாக வாக்கு அளிக்கிறார்கள் எனக் கூறி வாக்காளர் பட்டியலில் சேர்க்க தவறுவதை நாம் விடக்கூடாது. இப்ப பணியை அனைத்து அணி பொறுப்பாளர்களும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
இதை சிறப்பாக மேற்கொண்டால் வரும் தேர்தலில் நாம் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல்வராக இரண்டாவது முறையாக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்பார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் திமுகவினர் இன்னும் ஒரு மாதத்துக்கு தீவிரமாக பணியாற்ற வேண்டும் .வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், டெல்டா பகுதியிலுள்ள, மொத்தம் 41 சட்டமன்ற தொகுதிகளை திமுக வென்றெடுக்க, குறிப்பாக வாக்குச்சாவடி முகவர்கள் அயராது பாடுபட வேண்டும் என பேசினார்.

கூட்டத்தில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சரும், திமுக மாவட்டச் செயலருமான சா.சி.சிவசங்கர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டம் முடிவில் ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார். கூட்டத்திற்கு திமுக சட்டத் திட்ட திருத்தக் குழு இணைச் செயலர் சுபா.சந்திரசேகர் தலைமை வகித்தார். கூட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட திமுக வாக்குச் சாவடி முகவர்கள்,மாவட்ட, ஒன்றிய,நகர,பேரூர் கழக நிர்வாகிகள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)