• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பருவமழை காலத்தில் கனமழை பொழிவின் போது இயற்கை இடர்பாடுகள் ஏற்படுவதை தவிர்பது குறித்த முன்னேற்பாடுகள் மற்றும் நிவாரண பணிகள்…

ByKalamegam Viswanathan

Aug 21, 2023

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலத்தில் கனமழை பொழிவின் போது இயற்கை இடர்பாடுகள் ஏற்படுவதை தவிர்ப்பது குறித்த முன்னேற்பாடுகள் மற்றும் நிவாரண பணிகள் தொடர்பான அனைத்துத் துறை அலுவர்களுடனான ஆய்வுகூட்டம்

மதுரை மாவட்டத்தில், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலத்தில் கனமழை பொழிவின் போது இயற்கை இடர்பாடுகள் ஏற்படுவதை தவிர்த்திடவும், எதிர்கொள்ளவும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேர்பாடுகள் தொடர்பாகவும், இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் பட்சத்தில் மேற்கொள்ள வேண்டிய நிவாரண பணிகள் தொடர்பாகவும் தொடர்புடைய அனைத்துத் துறை அலுவர்களுடன், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர் நிலையங்களில் நீரோட்ட பாதைகளை சரி செய்து தும்புகளில் சேர்ந்துள்ள மண் மற்றும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய தேவையான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளவும், இடியும் நிலையில் உள்ள கட்டடங்கள், சேதமடைந்த கட்டடங்களின் அருகே பொது மக்கள் அணுகாத வண்ணம் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு இடியும் நிலையில் உள்ள கட்டடங்களை அகற்றிட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், துறை வாரியாக சிறப்பு குழுக்கள் சிறப்பு பணிகள் ஏற்படுத்தவும் மீட்பு வாகனங்கள் மற்றும் மீட்பு கருவிகள் தயார் நிலையில் வைத்திருக்கவும், மழையினால் பாதிக்கப்படும் பொதுமக்களை பாதுக்காப்பான இடங்களில் தங்கும் வைக்கும் சிறப்பு முகாம்களில் அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளனவா என்று ஆய்வு செய்யவும், மலேரியா, டெங்கு காய்ச்சல் முதலிய பருவகால நோய்கள் பரவாத வண்ணம் தேவையான முன்னெசரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
தனியார் மருத்துவமனைகள் பட்டியல் மற்றும் அம்மருத்துவமனையில் உள்ள மருந்து வகைகள் மற்றும் இதர வசதி விபரம் அடங்கிய பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். கனமழையில் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்றிடவும், வெள்ளத்தினால் ஏற்படும் இடர்பாடுகளை சமாளிக்கவும் 24 7 கால அளவிலும் தயார்நிலையில் இருக்க தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினருக்கும்இ கடந்த மழைக்காலங்களில் ஏற்கனவே, பாதிப்படைந்த பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் காலத்தில், அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, தெரிவித்தார்கள்.