• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

ஆதிபுருஷ் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிவராத்திரி ஸ்பெஷலாக பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இதனை பிரபாசும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில்உறுதிப்படுத்தியுள்ளார்..

ராமாயணத்தை மையமாக வைத்து மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் படம் ஆதிபுருஷ். ஓம் ராவத் இயக்கும் இந்த படத்தை டி சீரிஸ் ஃபிலிம்ஸ் மற்றும் Retrophiles இணைந்து தயாரித்து வருகின்றன. பிரபாஸ் ராமராகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடிக்கும் இந்த படம் 500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது.

1996 ல் ஜப்பான் மொழியில் உருவாக்கப்பட்ட Ramayana : The Legend of Prince Rama என்ற படம் தான் ஆதிபுருஷ் படம் உருவாக காரணமாக அமைந்த படம். இந்த படத்தை பார்த்து விட்டு தான், மாடர்ன் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, ராவணனின் கோணத்தில் இருந்து ராமாயணத்தை படமாக இயக்கினால் எப்படி இரக்கும் என்ற ஐடியா ஓம் ராவத்திற்கு வந்ததாம். கதையை கேட்டதும் பிரபாசும், தயாரிப்பு நிறுவனமும் உடனடியாக ஓகே சொல்லி விட்டார்களாம்.

ஆரம்பத்தில் பிரபாஸ் கேரக்டரின் பெயர் ராமா என்றே வைக்கப்பட்டதாம். பிறகு தான் ராகவன் என மாற்றி உள்ளனர். வில்லன் ரோலில் சைஃப் அலிகானும், சீதா கேரக்டரில் கீர்த்தி சனோனும் நடிக்கின்றனர்! இந்தி மற்றும் தெலுங்கில் பான் இந்தியன் படமாக உருவாக்கப்பட்டு வரும் ஆதிபுருஷ் படம் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட உள்ளது. இந்திய சினிமாவிலேயே அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்டு வரும் இது தான்.

இந்நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு இன்று காலை ஆதிபுருஷ் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ம் ஆண்டு சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 12 ம் தேதி உலகம் முழுவதும் ஆதிபுருஷ் 3டி வடிவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.