மதுரை மாநகர் விளக்குத் தூண் காவல் நிலைய பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பாக புத்தாடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க வரும் நேரங்களில் ஏற்படும் திருட்டு மற்றும் குற்ற நிகழ்வுகளை தடுக்கும் பொருட்டு கூட்ட நெரிசலை கண்காணிக்கும் விதத்தில் புதிதாக கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் புறக்காவல் நிலையங்களை மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

இதுகுறித்து மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் தெரிவிக்கையில் மதுரை மாநகர் மையப்பகுதியான விளக்குத்தூண் பகுதியில் கூடுதலாக காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் பொதுமக்கள் தீபாவளி பண்டிகை பொருட்கள் வாங்க வரும் நேரங்களில் தங்களின் உடைமைகளை பாதுகாக்கும் பொருட்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணிக்க கூடுதலாக தற்போது உள்ள கேமராக்களுடன் 16 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
மேலும் ட்ரோன் கேமராக்கள் மூலம் அவ்வப்போது கூட்ட நெரிசலில் ஊடுருவும் முக்கிய குற்றவாளிகளை காண்காணிக்கும் விதமாகவும் FRS காவல் உதவி செயலி மூலமாகவும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
மேலும் கூட்ட நெரிசலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வயதானவர்களையும் குற்றவாளிகளையும் கண்காணிக்க முக்கிய இடங்களில் இரண்டு QRT வாகனங்கள் நிறுத்தப்பட்டு கண்காணிக்கவும் மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு இரண்டு போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் வாகனங்கள் பயன்படுத்தப்படும் எனவும், மதுரை மாநகரில் 61 இரண்டு சக்கர ரோந்து வாகனங்களும் 21 நான்கு சக்கர வாகனங்களும் 24 மணி நேரமும் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்து கண்காணிக்கப்படும். நான்கு மாசி வீதிகளிலும் இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் நிற்பதற்கு 6 வாகன நிறுத்தும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்கள்.