• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நடிகை சோனியா அகர்வால் கைது

நடிகை சோனியா அகர்வாலை கர்நாடக போதைப்பொருள் தடுப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னட சினிமாவில் போதை பொருள் புழக்கம் இருப்பது கடந்த சில மாதங்களாக வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த 12ஆம் தேதி நைஜீரிய நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் விற்பனையாளர் தாமஸ் காலுவை கோவிந்த்புரா போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.50 லட்சம் மதிப்புள்ள 403 x டெக் மாத்திரைகளை போலீசார் கைப்பற்றினர்.

அவர் இந்த எக்ஸ்-பிசி மாத்திரைகளை கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழில் அதிபர்களுக்கு சப்ளை செய்வது தெரியவந்தது. மேலும் சினிமா பிரபலங்கள் பலருக்கும் விலையுயர்ந்த கோகோயின் செயற்கை மருந்துகள் விற்பனை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. ஒரு கிராம் கோகோயின் ரூ .15,000 க்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் போதைப்பொருள் விற்பனையாளர் தாமஸ் காலுவுடன் தொடர்பு வைத்திருந்த பல்வேறு பிரபலங்கள் மற்றும் வணிகர்களின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். ராஜாஜிநகர், பத்மநாபநகர் மற்றும் பென்சன் டவுனில் உள்ள டிஜே வச்சோன் சின்னப்பா, தொழிலதிபர் பரத் மற்றும் பிரபல நடிகை சோனியா அகர்வால் ஆகியோரின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.

கோவிந்த்புரா காவல் நிலையத்தில் கைதி தாமஸ் காலு அளித்த தகவலின் படி, சோதனைகள் தெரியவந்துள்ளது. சோதனையின் அடிப்படையில் ரியல் எஸ்டேட் அதிபர் பரத் போலீஸ் காவலில் எடுத்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அழகுசாதனத் தொழிலில் ஈடுபட்டுள்ள 40 வயதான கன்னட நடிகை சோனியா அகர்வால், வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து கன்னட நடிகை சோனியா அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்த புகாரில் பிரபல நடிகை கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் யாருக்கெல்லாம் போதை பொருட்களை சப்ளை செய்தார், யாரிடமிருந்து பெற்றார் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.