அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகை சமந்தா, முழுமையாக குணமடையும் வரை நடிப்பிலிருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. அவரது திரைப்படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. கடைசியாக சமந்தாவின் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படமும் நல்ல ஆதரவை பெற்றது.
சமந்தா அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நோய் பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு வருவேன் என்றும் அவர் தெரிவித்தார். , அவர் தென்கொரியா செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுமையாக குணமடையும் வரை நடிப்பிலிருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்க நடிகை சமந்தா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை சமந்தா சினிமாவில் இருந்து ஓய்வு எடுப்பதாக இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவுப்பு ஏதும் வெளியாகவில்லை. இருப்பினும் சமந்தாவின் உடல்நிலை மற்றும் அவர் குறித்தான வதந்திகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.