• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தன் மகளை விஜய் மகனுடன் கதாநாயகியாக அறிமுகப்படுத்த, நடிகை தேவயாணி விருப்பம்.

Byவிஷா

Jul 14, 2023

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜய். அவரின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் திரைப்பட இயக்கம் சம்மந்தமான படிப்பை முடித்துள்ளார். அதனால் அவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது சஞ்சய் கனடாவில் “புல் தி டிரிகர்” என்ற குறும்படத்தை இயக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.
இந்நிலையில் அடிக்கடி அவர் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகின்றன. ஆனால் அதிகாரப்பூர்வமாக அதுபற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் பிரபல இயக்குனரும் நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் தன் மகளை விஜய் மகனுக்கு கதாநாயகியாக அறிமுகப்படுத்த வேண்டும் என ஆசைப்படுவதாக ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
ராஜகுமாரன் – தேவயானி தம்பதிகளின் மூத்த மகளான இனியா இப்போது கல்லூரியில் படித்து வரும் நிலையில் ‘நீ வருவாய் என’ படத்தின் இரண்டாம் பாகத்தில் அறிமுகப்படுத்த ஆசைப்படுவதாகக் கூறியுள்ளார்.