• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நடிகர் யோகி பாபுவுக்கு தீபாவளி அன்று பிறந்த பெண் குழந்தை

ByA.Tamilselvan

Oct 25, 2022

பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு கடந்த சில வருடங்களுக்கு முன்பு மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு தீபாவளி தினத்தில் பெண் குழந்தை பிறந்ததுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. இவர் நடிப்பில் வெளியான காக்கிச் சட்டை, வேதாளம், ரெமோ, சர்கார், விஸ்வாசம், கூர்கா உள்ளிட்ட படங்களில் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திக்கேயன், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். மஞ்சு பார்கவி – யோகிபாபு யோகிபாபு கடந்த சில வருடங்களுக்கு முன்பு மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தீபாவளி தினமான நேற்று இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு திரையுலகினர் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.