• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பெரியார் வழிகாட்டிய பாதையில் பயணிக்க உறுதியேற்போம்… தவெக தலைவர் விஜய்!

ByP.Kavitha Kumar

Dec 24, 2024

தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூகநீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம் என்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் கூறியுள்ளார்.

தந்தை பெரியாரின் 51-ம் ஆண்டு நினைவு நாளான இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக நீதி அமைப்புகள் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்” என்று கூறியுள்ளார்.