• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பஞ்சாப் தேர்தலில் நடிகர் சோனு சூட் சகோதரி பின்னடைவு..!

கொரோனா ஊரடங்கு போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஹீரோவாக மாறிய சோனு சூட்டின் சகோதரி மால்விகா சூட் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களமிறங்கினார்.
மேலும் அவரை மோகா சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக கட்சி நிறுத்தியுள்ளது. ஆனால், மால்விகாவுக்கு சீட் கொடுத்ததற்கு கட்சியில் எதிர்ப்பு கிளம்பியது. இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சோனு சூட்டின் சகோதரி மால்விகா சூட் மோகா சட்டமன்றத் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளரான அமந்தீப் கவுர் அரோரா முன்னிலை வகிக்கிறார். பஞ்சாபில் தற்போதைய நிலவரப்படி ஆம் ஆத்மி முதல் இடத்திலும், ஆளும் காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.