• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

‘அயலான்’ படத்தில் ஏலியனுக்கு குரல் கொடுத்துள்ளார் நடிகர் சித்தார்த்..!

Byவிஷா

Dec 13, 2023

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்’ திரைப்படத்தில், ஏலியனுக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில், ‘அயலான்’ திரைப்படம் வெளியீட்டிற்கான வேலைகள் நடைப்பெற்று வருகின்றது. தீபாவளியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகளவில் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பம் தேவைப்படுவதால் இதன் வெளியீடு தள்ளிப் போன நிலையில், வரும் பொங்கல் விடுமுறையை ஒட்டி ‘அயலான்’ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பட வெளியீட்டிற்கான வேலைகள் மும்முரமாக நடைப்பெற்று வரும் நிலையில், படத்திற்கான புரொமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது.
சமீபத்தில் படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் வெளியான நிலையில், இந்த மாதம் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், இதில் உள்ள ஏலியன் கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். இதற்கு முன்பு வடிவேலு உள்ளிட்டப் பல நடிகர்கள் ஏலியனுக்கு குரல் கொடுத்ததாக சொல்லப்பட்ட நிலையில் அது சித்தார்த் என்பதை தற்போது படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.