• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அதிமுக கூட்டணியில் இணையும் நடிகர் சரத்குமார்

Byவிஷா

Feb 24, 2024

அதிமுக கூட்டணியில் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி இணைய உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் சமக இரண்டாவது கட்ட பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது. அதிமுகவின் மூத்த தலைவர்கள் சரத்குமாரை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசினர். அதில் நிபந்தனையுடன் ஒரு தொகுதி தர அதிமுக தலைமை சம்மதம் தெரிவித்துள்ளது. அதாவது இரட்டை இலை சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என கூறியதற்கு சரத்குமாரும் ஓகே சொல்லிவிட்டாராம். ஏறக்குறைய கூட்டணி உறுதியானதாக தகவல் வெளியாகி உள்ளது.