• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மன்மோகன் சிங் சிறந்த பொருளாதார வல்லுநர்… நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்!

ByP.Kavitha Kumar

Dec 27, 2024

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிறந்த பொருளாதார வல்லுநர் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர்மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் டெல்லியில் நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மன்மோகன் சிங் ஒரு சிறந்த பொருளாதார வல்லுநர் மற்றும் அற்புதமான மனிதர் என்றார்.