• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சினிமாவைவிட்டு விலகும் அசாசுர நடிகர் நாசர்..

Byகாயத்ரி

Jun 30, 2022

கொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட இதய பாதிப்பு காரணமாக, நடிப்பில் இருந்து நடிகர் நாசர் விலக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் ரஜினி, கமல் என்று பல ஜாம்பவான்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் கே.பாலச்சந்தர் தான், தனது கல்யாண அகதிகள் என்ற படம் மூலமாக நாசரை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார். நாசர் நடிப்பில் வெளிவந்த, தேவர் மகன், குருதிப்புனல், பம்பாய் உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவிற்கு தனித்துவமான நடிகர் என தனக்கென தனி அடையளாம் பதித்தவர்.

இவர் டைரக்டர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், டப்பிங் கலைஞர், நடிகர் சங்க தலைவர், அரசியல்வாதி என பல முகங்களைக் கொண்டு விளங்குகிறார். இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர். அதிலும், பாகுபலி படத்தில் இவரது நடிப்பை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இன்றுவரை தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களை கட்டி போட்டவர். சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும், கமலின் மக்கள் நீதி மய்ய கட்சியிலும் இணைந்து பணியாற்றி வந்தார். இவரது மனைவி கமல் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டார். நாசர் தற்போது இரண்டாவது முறையாக நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்நிலையில் நடிப்பில் இருந்து விலக நாசர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்று காலத்தில் இதய பாதிப்புகளால் நாசர் கடுமையாக அவதிப்பட்டு, அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், தன்னுடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் நாசர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் திரையுலகினர் மட்டுமின்றி அவரது ரசிகர்களும் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். அதே சமயம் நாசரின் உடல்நிலை விரைவில் குணமடைந்து, அவர் மீண்டும் நடிப்பிற்கு திரும்பி வர அனைவரும் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளனர்.