• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சிவகங்கையில் செயல்வீரர்கள் கூட்டம்.

ByG.Suresh

Oct 25, 2024

சிவகங்கை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை திமுக தெற்கு ஒன்றிய சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் M. ஜெயராமன் தலைமையில் ,துணை செயலாளர் பஞ்சவர்ணம் முன்னிலையில் தெற்கு ஒன்றிய அலுவலகம், கலைஞர் அறிவாலயத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருகிற சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றது மேலும்,

  1. உதயநிதி அவர்கள் துணை முதல்வராக பதவி வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்தும்
  2. வாக்காளர் சிறப்பு முகாமில் கிளைக் கழக செயலாளர்கள், பாக முகவர்கள் பங்கேற்க அறிவுறுத்தல் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
    இந்நிகழ்ச்சியில் சிங்கமுத்து, மனோகர், பாண்டியராஜன், முருகன், மார்க்கரேட் கமலா, இளைஞரணி அமைப்பாளர் செல்வம், J. ராம்குமார், அழகுசுந்தரம், தங்கசாமி, முத்துக்குமார், ரமேஷ், வேல்முருகன், விஜயா, லெட்சுமி, பொன்னம்பலம் மற்றும் ஏராளமான கிளைக் கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.