புதுக்கோட்டையில் கடந்த 19.12.2025 அன்று பல் மருத்துவர் ஒருவர் வீட்டில் 24 பவுன் நகை திருடு போய்விட்டது. இது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று நகை திருடிய நபரிடமிருந்து போலீசார் நகையை மீட்டனர்.

இதுகுறித்து அண்மையில் புதுக்கோட்டையில் புதிய டிஎஸ்பியாக பொறுப்பு ஏற்று கொண்ட பிருந்தா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது… நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தெற்கு ராஜவீதி பகுதியில் மருத்துவர் வீட்டில்
நகை திருடு போன பிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் சுகுமாறன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அது குறித்து தொடர்ந்து விசாரணை மற்றும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் மருத்துவர் வீட்டில் நகைகளை திருடியது தெரியவந்தது. சுந்தர்ராஜன் மீது ஏற்கனவே சேலம் நாமக்கல் தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருந்து வருகின்றது.

இதில் துரிதமாக செயல்பட்டு நகைகளை மீட்க காரணமாக இருந்த தனிப்படை போலீசார் அனைவரையும் நான் ஒரு டிஎஸ்பி என்கிற முறையில் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன் பாராட்டுகிறேன். இப்போது தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து இருப்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். வெளியூர் செல்பவர்கள் தாங்கள் இருக்கும் பகுதிக்கு உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு சென்றால் நாங்கள் போலீஸ் காவல் அதிகப்படுத்த வாய்ப்பாக இருக்கும் இரவு நேரங்களில் காவல் கண்காணிப்பை அதிகப்படுத்துவோம். மேலும் பொதுமக்களும் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.

இந்த நகை திருட்டு சம்பவத்தில் நகையின் உரிமையாளர் பீரோவில் நகையை வைத்துவிட்டு சாவியை அதிலேயே தொங்க வைத்திருக்கிறார். அவருக்கு வீடும் அலுவலகமும் ஒரே கட்டடத்தில் இருப்பதால் கவனிக்காமல் இருந்திருக்கிறார். கடந்த ஒரு மாத காலமாக இதை நோட்டமிட்டு வந்த சுந்தர்ராஜன் எங்க திருடி இருக்கிறான். இதே போல கூட்டாக சேர்ந்து எந்த திருட்டு சம்பவத்திலும் அவன் ஈடுபட்டதாக தெரியவில்லை எல்லாமே தனி ஆளாகத்தான் செய்திருக்கிறான். நகை விலை அதிகமாக இருப்பதால்தான் குற்ற செயல்களும் அதிகரித்திருக்கிறது. இந்த திருட்டு சம்பவத்தில் உடனடியாக குற்றவாளி கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்றாலும் மீதமுள்ள இது போன்ற திருட்டு சம்பவங்கள் குறித்து கோப்புகள் எடுக்கப்பட்டு அவற்றின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் மீது இரும்புக்கரம் கொண்டு அடக்கி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.




